Sunday, September 8, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட்... யாருக்கு, என்ன விஷயம் பாருங்க

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட்… யாருக்கு, என்ன விஷயம் பாருங்க


குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

1 சீசனிற்கு கிடைத்த வெற்றி அப்படியே தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த 5வது சீசனில் அனைத்துமே புதியது. நடுவர், நிகழ்ச்சி இயக்குனர், தயாரிப்பாளர் என நிறைய விஷயங்கள் மாறியுள்ளது. 

இதனாலேயே இந்த 5வது சீசன் பிக்கப் ஆக நேரம் எடுத்தது. ஆனால் இப்போது பழையபடி நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். 

பட வாய்ப்பு

தற்போது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஷாலி கெம்கருக்கு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

தற்போது நயன்தாரா நடித்துவரும் புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு விஷாலி கெம்கருக்கு கிடைத்துள்ளதாம்.

அந்த படத்தில் நடிகர் கவினும் உள்ளாராம். கெமி, வீடியோ ஜாக்கி, ரேடியோ ஹோஸ்ட், மாடல், பைக்கர் என பல திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

நயன்தாராவின் படம் மூலம் முதன்முறையாக அவர் சினிமாவில் களமிறங்குவதால் படு மகிழ்ச்சியில் உள்ளாராம். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட்... யாருக்கு, என்ன விஷயம் பாருங்க | Cook With Comali Fame Kemy Debut Movie



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments