குக் வித் கோமாளி
சின்னத்திரையில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது குக் வித் கோமாளி. 5வது சீசன் நடைபெற்று வரும் இந்த நிலையில் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மணிமேகலையின் வெளியேற்றத்திற்கு காரணம் தொகுப்பாளர் பிரியங்கா தான் என்கிற செய்தியும் தொடர்ந்துவைரலாகி வந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மற்ற திரையுலக பிரபலங்கள் என பலரும் இதை பற்றி பேச துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி 5ன் பைனல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பைனலில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், சோயா, விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
என்ட்ரி கொடுத்து இரண்டு ஹீரோஸ்
5 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் சோமாலி பைனலில் தங்களது மெய்யழகன் படத்தை ப்ரொமோட் செய்வதற்காக நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியுட்டுள்ளனர்.
அவர்கள் மட்டுமின்றி நடிகை ராதாவும் குக் வித் கோமாளியில் வந்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் சாமி தனக்கு மிகவும் நன்றாக சமைக்க தெரியும் என்றும், கார்த்திக்கு நன்றாக சாப்பிட தெரியும் என்றும் கூறியுள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..