குக் வித் கோமாளி 5
தமிழ் சின்னத்திரையில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி 5.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் கொஞ்சம் கலாட்டா அதிகம் என்ற கான்செப்டில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரெட்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சமையல் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டாவது எலிமினேஷன் நடந்துள்ளது.
அதில் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளார், அவரது எலிமினேஷன் Unfair எனவும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபலத்தின் பேச்சு
இந்த நிலையில் வசந்த் வசி ஒரு பேட்டியில், நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன், அந்தந்த வயதில் சில பொருள்கள் மீது ஆசை இருக்கும் ஆனால் எனக்கு கிடைக்கவே கிடைக்காது.
ஆனால் அதையே நினைத்து வருத்தப்பட மாட்டேன், அடுத்து என்ன நடக்குமோ அதை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பேன்.
அதேபோல் தான் எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எவிக்ஷன் கூட தோன்றுகிறது, ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் நாம் இதில் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது, அதனால் கடந்து போக நினைக்கிறேன்.
அம்மா அழகாக சமைப்பாங்க அதை ரசிச்சு வாப்பிட ஆரம்பித்தேன், ரசித்து சாப்பிட்டதால் அதை விரும்பி சமைக்கவும் தொடங்கிவிட்டேன். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முயற்சி செய்தேன், ஆனால் அது புஸ்ஸுன்னு போய்விட்டது என பேசியுள்ளார்.