Saturday, March 15, 2025
Homeசினிமாகுடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த விஜய் சேதுபதியின் நண்பன்.. யார் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்! வீடியோ...

குடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த விஜய் சேதுபதியின் நண்பன்.. யார் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்! வீடியோ இதோ


பிக் பாஸ் 

பிக் பாஸ் 8 தற்போது 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ரானவ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் மஞ்சரி வெளியேறவுள்ளார்.

ஆம், இந்த வாரம் டபுள் எலிமினேஷன். இந்த 8வது சீசனில் இது நான்காவது முறையாக நடக்கும் டபுள் எலிமினேஷன் ஆகும். இந்த வாரம் ரானவ் மற்றும் மஞ்சரி வெளியேறிய நிலையில், மீதம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள். இதில் யார் வெற்றிபெற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் சேதுபதியின் நண்பன்

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில், வழக்கமாக அங்கிருக்கும் ஆடியன்ஸ் இடம் விஜய் சேதுபதி கருத்துக்களை கேட்பார். அப்போது, அந்த கூட்டத்தில் விஜய் சேதுபதியுடன் படித்த நீண்ட கால நண்பர் தனது குடும்பத்துடன் வந்து அமர்ந்திருக்கிறார்.

குடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த விஜய் சேதுபதியின் நண்பன்.. யார் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்! வீடியோ இதோ | Vijay Sethupathi Friends Family In Bigg Boss 8

தனது நண்பனை பார்த்த விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் திகைத்து போக, அவருடைய மகன்களிடம் படிப்பை பற்றி பேசினார். யார் எதிர்பார்க்காமல் நடந்த இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments