GOAT
இன்று உலகமெங்கும் பிரமாண்டமான முறையில் தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் வெளிவந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் GOAT படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் காட்சி முடிந்துள்ள நிலையில், படத்திற்கான விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்திற்கான பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
குடும்பத்துடன் படம் பார்த்த விஜய்
இந்த நிலையில், GOAT படத்தை தளபதி விஜய் தனது குடும்பத்துடன் சேர்ந்து GOAT படத்தை பார்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு அடையாறில் உள்ள பிரபல திரையரங்கில் படம் பார்த்ததாக தகவல் தெரிவிக்கின்றன.