குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் த்ரிஷா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு, சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாக சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
த்ரிஷா சம்பளம்
குட் பேட் அக்லி படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்கிற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
இதை தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா. அதுகுறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக நடிகை த்ரிஷா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.