Thursday, April 24, 2025
Homeசினிமாகுட் பேட் அக்லி முரட்டு சம்பவம்.. 500 கோடி வசூல் உறுதி! மீண்டும் இணையும் அஜித்...

குட் பேட் அக்லி முரட்டு சம்பவம்.. 500 கோடி வசூல் உறுதி! மீண்டும் இணையும் அஜித் – ஆதிக்?


குட் பேட் அக்லி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்த படம் குட் பேட் அக்லி.

இப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை எந்த ஒரு அஜித் திரைப்படத்திற்கும் கிடைக்காத ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

மேலும் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் ரூ. 35 கோடிக்கும் மேல் வரும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி கண்டிப்பாக இப்படத்தின் வசூல் ரூ. 500 கோடி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார்.

குட் பேட் அக்லி முரட்டு சம்பவம்.. 500 கோடி வசூல் உறுதி! மீண்டும் இணையும் அஜித் - ஆதிக்? | Again Adhik Ravichandran Ajith Combo For New Movie

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் இவரே இயக்குவார் என தகவல் கூறுகின்றன. அதாவது குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகே 64 திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். அஜித் ஒரு இயக்குனருடன் நெருங்கி பழகி துவங்கிவிட்டால் கண்டிப்பாக தொடர்ந்து அவருடன் படம் பண்ணுவார்.

குட் பேட் அக்லி முரட்டு சம்பவம்.. 500 கோடி வசூல் உறுதி! மீண்டும் இணையும் அஜித் - ஆதிக்? | Again Adhik Ravichandran Ajith Combo For New Movie

சிறுத்தை சிவா, ஹெச். வினோத் ஆகிய இயக்குநர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அதன்படி, தற்போது இரண்டாவது முறையாக ஆதிக் உடன் அஜித் இணைவார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments