குட் பேட் அக்லி
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜித்தை வைத்து குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து மீண்டும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறாராம். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
ரிலீஸ் தேதி மாற்றமா
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்த இப்படம் சொன்ன தேதியில் வெளிவருவது கடினம் என கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக 2025ஆம் ஆண்டு மே மாதம் குட் பேட் அக்லி வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இதைப்பற்றிய அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.