ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், கடந்த வருடத்தில் இருந்து புதிய நபராக மாறிவிட்டார் என்றே கூறலாம்.
திடீரென பெயரை மாற்றினார், இயக்குனர் அவதாரம் எடுப்பேன் என்கிறார், அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் செய்கிறார்.
சமீபத்தில் டாடா பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அரசியல்வாதியாக இப்படத்தில் ரவி மோகன் நடிக்க கராத்தே பாபு என்ற பட பெயருடன் டீஸரும் வெளியானது.
லேட்டஸ்ட் வீடியோ
படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவரும் ரவி மோகன் ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்துவரும் குழந்தைகளுடன் விளையாடி, நடனமாடி நேரத்தை செலவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இன்ஸ்டாவிலும் வெளியாகியுள்ளது.