இணையத்தில் அவ்வப்போது திரையுலக நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது உலகளவில் ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தான். ஆம், நடிகர் மோகன்லாலின் குழந்தை பருவ புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹேமா கமிட்டி
சமீபத்தில் வெளிவந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மோகன்லால். நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக இவர் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளிவந்த நிலையில் AMMA எனும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் அதிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும் AMMA சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்பின் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகை பார்வதி கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனம் என தனது கருத்தை முன் வைத்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேசிய மோகன்லால் ‘நான் எங்கும் ஓடி ஒழிய வில்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.