பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடரின் கதையில் ராமமூர்த்தி இறக்க கதைக்களம் சோகமாக சென்று கொண்டிருக்கிறது.
கோபி, பாக்கியாவை பழிவாங்கியே ஆக வேண்டும் என கொடூர வில்லனாக மாற இருக்கிறார்.
இனி கதைக்களம் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரித்திகா
இந்த தொடரில் அமிர்தாவாக நடித்துவந்த ரித்திகா திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தியுள்ளார். சில ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிவந்த ரித்திகா சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி ரித்திகாவிற்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை ரித்திகா தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.