நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு 80களில் தமிழ் சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர். மும்பையில் இருந்து தமிழ் தெரியாமல் நடிக்க வந்தவர் நாயகியாக நடித்த தொடங்கிய விரைவிலேயே தமிழை கற்றுக்கொண்டார்.
சொந்த குரலிலேயே டப்பிங் பேசி கலக்கியவர் அழகு, நடிப்பு, நடனம் என அசத்தினார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
குஷ்பு ஸ்பெஷல்
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட குஷ்புவை கொண்டாடும் விதமாக அவருக்கு கோவில் எல்லாம் கட்டினார்கள்.
அதேபோல் குஷ்பு இட்லி மிகவும் பேமஸ் ஆனது. இந்த குஷ்பு இட்லி பெயர் எப்படி உருவானது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர், தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தபோது லைட்மேன்கள் எல்லோரும் வாடா போடா என பேசிக்கொண்டார்களாம், அப்போது குஷ்புவிற்கு அவ்வளவாக தமிழும் தெரியாதாம்.
அவர்கள் பேசுவதை பார்த்து சாதாரண வார்த்தை என நினைத்து ரஜினியை ஒரு முறை வாடா என்று சொல்லிவிட்டாராம். உடனே பிரபு அப்படி சொல்லக் கூடாது என கூற அவர் லைட்மேன்கள் பேசிக்கொள்வதை காட்டியுள்ளார்.
பின் பிரபு குஷ்புவிற்கு, ரஜினியை பார்த்து அப்படி சொல்லக் கூடாது என எடுத்துரைத்துள்ளார்.
அதோடு குஷ்புவின் கன்னத்தை கிள்ளி நல்லா இட்லி மாதிரி இருக்க என விளையாட்டாக சொல்ல அப்போதில் இருந்து குஷ்பு இட்லி என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தார்களாம்.