நடிகர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்தால் அவர்களுடன் செல்பி எடுக்கவே அதிகம் கூட்டம் கூடும். அப்படி பிரபலங்களின் ஏர்போர்ட் வீடியோக்களும் தினமும் இன்ஸ்டாக்ராமில் வைரலாவதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
லிங்கா பட புகழ் நடிகை சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் அவரது காதலர் ஜாகிர் இஃபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் இன்று ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறார்.
நிறுத்திய போலீஸ்
ஏர்போர்ட்டில் சோனாக்ஷி சின்ஹாவின் அடையாள அட்டையை வாங்கி பார்த்த பாதுகாப்பு அதிகாரி சோனாக்ஷியை உள்ளே அனுமதிக்க மறுத்து இருக்கிறார்.
கண்ணாடியை கழட்டி முகத்தை காட்டும்படி கூறிய அந்த அதிகாரி, முகத்தை தெளிவாக பார்த்த பிறகு தான் அவரை உள்ளே அனுப்பி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.