நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது கடின உழைப்பால் சிறந்த படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
தற்போது, இவர் நடிப்பில் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வேட்டையன் படம் வெளிவர உள்ளது.
இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது இது குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த படத்தின் அப்டேட்
அதாவது, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமான 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ரஜினியிடம் கதை கூறியுள்ளதாகவும்.
இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.