கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லியோ படத்தை தொடர்ந்து இவர் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், இப்படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என பலரும் நடித்து வருகிறார்.
கெஸ்ட் ரோலில் இவரா
இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் கெஸ்ட் ரோலில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், இதற்கான சந்திப்பு சமீபத்தில் தான் நடந்ததாம்.
இந்த நிலையில், கூலி படத்தில் நடிக்க சல்மான் கான் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.