கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம் , நடிகர் அமீர் கான் என பலர் கூலி படத்தில் இணைந்துள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது.
படத்தில் இணைந்த முக்கிய நடிகர்
இந்த நிலையில், கூலி படத்தில் நடிக்கப்போகும் கதாபாத்திரங்கள் குறித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், தற்போது மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்திருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.