Sunday, December 8, 2024
Homeசினிமாகூலி படத்தை வாங்க போட்டிபோடும் நிறுவனங்கள்.. விலை மட்டுமே தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

கூலி படத்தை வாங்க போட்டிபோடும் நிறுவனங்கள்.. விலை மட்டுமே தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க


கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்திற்கு பின் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினிகாந்த் கைகோர்த்துள்ள படமும் இதுவே ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஷோபின் ஷபீர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கூலி படத்தின் ஓடிடி உரிமை குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை கைப்பற்ற அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் என இரண்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறார்களாம்.

போட்டிபோடும் நிறுவனங்கள்

கூலி படத்தை கைப்பற்ற வேண்டும் என்று ரூ. 175 கோடி கொடுத்து கூட இப்படத்தை வாங்க இரு நிறுவனங்களும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூலி இதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கும் ஜெயிலர் 2 என இரண்டு திரைப்படங்களும் தலா ரூ. 175 கோடி என, மொத்தம் ரூ. 350 கோடி கொடுத்து வாங்க முன் வந்துள்ளனர்.

இந்த சமயத்தில், ஒரு படத்திற்கு ரூ. 200 கோடி என, இரண்டு படத்திற்கும் சேர்த்து ரூ. 400 கோடி கொடுத்து கூலி மற்றும் ஜெயிலர் 2 இரண்டு திரைப்படங்களையும் வாங்கிக்கொள்ளுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

கூலி படத்தை வாங்க போட்டிபோடும் நிறுவனங்கள்.. விலை மட்டுமே தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Rajinikanth Coolie Ott Selling Price Is 200 Crore

இந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் படுவைரலாக பேசப்பட்டு வருகிறது. இதுமட்டும் நடந்தால் கோலிவுட் திரையுலகில் ஓடிடி-யில் அதிகம் விலை கொடுத்து வாங்கப்பட்ட திரைப்படமாக கூலி மற்றும் ஜெயிலர் 2 இருக்கும் என சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments