சிறகடிக்க ஆசை
டிஆர்பியில் வாரா வாரம் டாப்பில் இருந்து வருகிறது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல்.
இந்த சீரியலில் தற்போது ரோஹினியின் இரண்டாவது கர்ப்பம் பற்றிய பிரச்சனை தான் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனால் ரோஹினி எப்படியோ சமாளித்து மனோஜின் முதல் குழந்தை தான் கலைந்துவிட்டது என குடும்பத்தை நம்ப வைத்துவிட்டார்.
விஜயா இப்போது மீனாவை வீட்டைவிட்டு அனுப்பும் யோசனையில் உள்ளார். இன்னொரு பக்கம் மீனா, முத்துவிடம் ரோஹினி வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை உள்ளது என கூறுகிறார்.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்து கடைசியாக நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது. அதில், ஸ்ருதி-மீனா இருவரும் பேய் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது மீனா பயந்துள்ளார்.
விஜயா வெளியே வந்து இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என கேட்க மீனா பயந்ததை ஸ்ருதி கூறுகிறார். பேய்க்கு எல்லாம் பயப்படுவாங்களா, உங்கள மாதிரி சின்ன பசங்க தான் பயப்படுவீங்க, எனக்கு எல்லாம் பயம் கிடையாது என்கிறார்.
ஸ்ருதி விஜயாவை பயமுறுத்த ஏதோ செய்ய இருக்கிறார், அது என்ன என்பதை நாளை பார்ப்போம்.