சிறகடிக்க ஆசை
சில தொடர்கள் எல்லாம் கதையே இல்லாமல் எபிசோட் ஓட்ட வேண்டும் என்று ஏதேதோ செய்வார்கள்.
ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் எதார்த்தமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில் முத்து தனது நண்பனிடம் இருந்து கட்டிலை வாங்கியுள்ளதாக தனது வீட்டிற்கு கொண்டு வருகிறார். அதனை பார்த்து வேஸ்ட்டான கட்டில் என மனோஜ் மற்றும் விஜயா கிண்டல் செய்கிறார்கள்.
ஆனால் கட்டிலை பார்த்த ஸ்ருதி, இது மிகவும் Rareஆன கட்டில், பல வருஷங்கள் உழைக்கும், சூப்பர் என பெருமையாக பேசுகிறார்.
அடுத்த வார எபிசோட்
ரவி தனது கம்பெனி நடத்தும் போட்டியை பற்றி கூற மனோஜ் மற்றும் முத்து இடையே வழக்கம் போல் வாக்குவாதம் நடக்கிறது, பின் இறுதியில் இருவரும் கலந்துகொள்ள ஒப்புக்கொள்கிறார்கள்.
அடுத்த வார புரொமோவில், ரோஹினி தான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், வீட்டிற்கு எவ்வளவு கொடுக்கிறேன், என்னென்ன செலவு என கூறுகிறார். கடைசியில் Blackmailerகும் பணம் கொடுக்க வேண்டும் என கூற மனோஜ், முத்து மற்றும் மீனா ஷாக் ஆகிறார்கள்.
பின் ரோஹினி மனோஜிடம் இதுகுறித்து என்ன சொல்லி சமாளிக்கிறார் என்பதை அடுத்த வார எபிசோடில் காண்போம்.