Monday, March 24, 2025
Homeசினிமாகேன்சர் அனுபவித்த நேரத்தில், வேதனையை பகிர்ந்த நடிகை கௌதமி.. சோகமான விஷயம்

கேன்சர் அனுபவித்த நேரத்தில், வேதனையை பகிர்ந்த நடிகை கௌதமி.. சோகமான விஷயம்


கௌதமி

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போதும் ரசிகர்களால் அதிகம் பேசப்படுகிறார்கள்.

குஷ்பு, ராதிகா, மீனா போன்ற நடிகைகள் பலரும் படங்களில் கலக்கிறார்கள், சிலர் சின்னத்திரை களமிறங்கி நடித்து வருகிறார்கள். அப்படி 80களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கௌதமி.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல போராட்டத்திற்கு பின் அதில் இருந்து மீண்டார்.


சந்தித்த வலிகள்


அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை கௌதமி, புற்றுநோயால் தான் சந்தித்த வலிகள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், புற்றுநோய் காலத்தில் அந்த வாழ்க்கை மிகவும் மோசமானதாகவே இருந்தாலும் என் மகளுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு ஓடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் எனது மகள் மட்டும் தான். நான் இல்லை என்றால் என் மகளுக்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்ததால் நான் கேன்சரை எதிர்த்து போராடினேன்.

கேன்சர் அனுபவித்த நேரத்தில், வேதனையை பகிர்ந்த நடிகை கௌதமி.. சோகமான விஷயம் | Gauthami Bold Interview About Cancer

அப்போது ஒவ்வொரு விஷயத்தையும் என்னுடைய மகளுக்கு நான் சொல்லி சொல்லி தான் வளர்த்தேன். நான் இதில் இருந்து மீண்டு வரலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் அவருக்கு சொல்லிக் கொண்டே தான் இருந்தேன்.


அப்போது எனது மகள் அனுபவித்த வலி சொல்ல முடியாதவை, சிறுவயதில் இருந்து என் மகள் சந்தித்த பிரச்சனைகளால் அவள் என்னை விட தைரியசாலியாகவே இருக்கிறாள் என கூறியுள்ளார். 

கேன்சர் அனுபவித்த நேரத்தில், வேதனையை பகிர்ந்த நடிகை கௌதமி.. சோகமான விஷயம் | Gauthami Bold Interview About Cancer

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments