நடிகை ராதிகா
எல்லா துறையிலுமே பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்படி மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைத்ததன் மூலம் பலர் தாங்கள் சந்தித்த மோசமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.
இதனால் மலையாள சினிமா மிகவும் ஆடிப்போய்யுள்ளது, இதுகுறித்து தமிழ் சினிமா பிரபலங்களும் சில கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனை வெடித்த பிறகு நடிகை ராதிகா ஒரு ஷாக்கான தகவலை வெளியிட்டார். மலையாள படத்தில் நடிக்கும் போது அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து பேசியிருந்தார்.
நடிகையின் தகவல்
நடிகை ராதிகா இப்படி சொன்னவுடன் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நடிகை ராதிகா சமீபத்திய பேட்டியில், நான் கேரவன் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசியதும் நடிகர் மோகன்லால் எனக்கு போய் செய்து இது என் செட்டில் நடந்ததா என்று கேட்டார்.
நான் அப்போது அவரிடம் சார் நான் பேர் சொல்ல விரும்பவில்லை, அது நீங்களோ வேற யாரோன்னு நான் சொல்லல. ஆனால் அந்த செட்டில் பெரிய நபர்கள் யாரும் இல்லை, நான் நடந்துபோகும் போது பார்க்கும் போது அது தவறாக வீடியோ என்று எனக்கு தெரிந்தது.
அவங்க பாஷை எனக்கு புரியாததால் தமிழ் தெரிஞ்ச நபரை கூப்பிட்டு திட்டி அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் நான் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லை, அதனால் என்னை இன்வெஸ்டிகேஷன் செய்யவில்லை என கூறியுள்ளார்.