நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் GOAT.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. திரையரங்கில் வெற்றிநடை போட்ட இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.
GOAT மோதிரம்
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் GOAT என பெயர் கொண்ட மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த மோதிரம் நடிகர் விஜய்க்கு பரிசாக வந்துள்ளது.
விஜய் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. அதனை நீங்களே பாருங்க..
விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நாளை முதல் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.