தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
பேட்டி
இந்நிலையில் தங்கலான் படக்குழு சினிஉலகம் பக்கத்திற்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருந்தனர். அதில் பேசிய பா ரஞ்சித்,
தங்கலான் படத்தை பொருத்தளவு நான் சரியாக பிளான் செய்யவில்லை.
ஆர்த்தி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் கரெக்ட்டா இருப்பார் என்று நினைந்தேன், அதே போல லுக் டெஸ்டில் அமைந்தது. ஷூட்டிங் சென்ற பின்னர் தான் மாளவிகா மோகனனுக்கு ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பது சிரமம் என்பதே தெரிந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு இருந்தார்.
ஒரு கட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதார். ஆனால், அவங்களோட இன்வால்வ்மெண்ட் ரொம்பவே பிடித்தது. நானும் ஏன் ரொம்பவே கொடூரமாக நடந்துக் கொண்டேன் தெரியவில்லை.
அதன் பின்னர் மாளவிகா மோகனனுக்கு முறையான சிலம்பம் பயிற்சி கொடுத்து பிசிக்கலாக டிரெய்ன் ஆனபிறகு ஷூட்டிங் செய்தோம். அதையடுத்து அவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினார் என்று பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.