நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா.
நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவிற்கு அடையாளம் கொடுத்த படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான்.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவருக்கு முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.
பின் எஜமான், வீரா, முத்து போன்று ரஜினியுடனே 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சொத்து மதிப்பு
கணவர் இறப்பிற்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை மீனா இப்போது தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.
இந்த நிலையில் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.