விஜய்யின் கோட்
கடந்த செப்டம்பர் 5ம் தேதி தமிழ்நாடே கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் அளவிற்கு வெளியான படம் கோட், The Greatest Of All Time.
உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது 8 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 332 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 140 கோடியை எட்டியுள்ளதாம்.
தற்போது படத்தில் இடம்பெறும் சின்ன சின்ன காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
முதல் சாய்ஸ்
இந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மாஸ் காட்டியவர் நடிகை த்ரிஷா. மட்ட பாடலில் இதுவரை ஆடாத நடனத்தை ஆடி எல்லோரையும் ஆட வைத்துவிட்டார்.
கோட் படத்தில் மற்ற பாடல்களை தாண்டி இந்த எங்கடா அந்த மஞ்ச புடவ என விஜய் கூற வரும் பாடல் காட்சிகள் தான் சமூக வலைதளங்கவில் அதிகம் வலம் வருகின்றன.
ஆனால் த்ரிஷாவிற்கு பதில் மட்ட பாடலில் நடனமாட இயக்குனர் வெங்கட் பிரபு நடிகை ஸ்ரீலீலாலை தான் முதலில் அணுகியதாக கூறப்படுகிறது.
குண்டூர் காரம் படத்தில் குச்சி மடத்தபெட்டி பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் ஒரு பாடலில் மட்டும் நடிப்பதை விரும்பவில்லையாம், அதன்பிறகு த்ரிஷாவிடம் அந்த வாய்ப்பு சென்றுள்ளது.