நடிகர் விஜய்யின் கோட் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு பிரஸ் மீட்டில் படத்தை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி இருக்கிறார்.
ட்ரோல்களால் எடுத்த முடிவு
பிரஸ் மீட்டில் பேசும்போது விஜய்யின் இளமை தோற்றத்தை சிஜி மூலமாக உருவாக்கியது, மற்றும் அது ட்ரோல்களை சந்தித்தது பற்றி வெங்கட் பிரபு பேசி இருக்கிறார்.
அந்த லுக் என்னை போல இல்லாமல் போய்விடப் போகிறது, அதை மட்டும் பார்த்துக்கொள் என விஜய் முதலிலேயே கூறினார்.
அதன் பின் ஸ்பார்க் பாடல் வெளியான போது சில விமர்சனங்கள் வந்தது. அதனால் விஜய் முகத்திற்கு அதிக மாற்றங்கள் செய்ய வேண்டாம் என முடிவெடுத்து அனைத்து பணிகளையும் மீண்டும் செய்தோம்.
அதனால் தான் டிரெய்லர் வெளியாக தாமதம் ஏற்பட்டது என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்தது தான் இறுதியானது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.