Friday, September 13, 2024
Homeசினிமாகோப்ரா படம் பிளாப் ஆனதற்கு உண்மை காரணம்.. போட்டுடைத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து

கோப்ரா படம் பிளாப் ஆனதற்கு உண்மை காரணம்.. போட்டுடைத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து


விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2022ல் ரிலீஸ் ஆன படம் கோப்ரா. கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டு லாக்டவுனால் ஷூட்டிங் அடிக்கடி தடைபட்டு அதன் பின் ஒருவழியாக முடித்து 2022ல் ரிலீஸ் ஆனது இந்த படம்.

ஆனால் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது. அந்த படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தான் இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி என்ற படத்தை எடுத்து இருக்கிறார்.

கோப்ரா பிளாப் காரணம்

கோப்ரா படம் தோல்வி பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கும் அஜய் ஞானமுத்து அது தன்னுடைய கதையே அல்ல என அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

“நான் ஒரு கதை சொன்னேன். அது தயாரிப்பாளர் வேண்டாம் என கூறிவிட்டு, அவர் வேறொரு கதையை சொல்லி அதை படமாக்க சொன்னார். அவர் சொன்ன கதைக்கு ஸ்கிரீன்ப்ளே நான் எழுதிய போதும் அந்த கதையை என்னால் மாற்ற முடியவில்லை.”

“அந்த கதையை ஏற்றுக்கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு” என அஜய் ஞானமுத்து தெரிவிட்டுத் இருக்கிறார். 

கோப்ரா படம் பிளாப் ஆனதற்கு உண்மை காரணம்.. போட்டுடைத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து | Ajay Gnanamuthu Reveal Cobra Movie Flop Reason

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments