சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர்.
பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக எந்த ஒரு குறையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் புதிது புதிதாக எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி ஜுனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று இப்போது வெள்ளித்திரையில் கலக்கும் பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா என பலர் நடித்தும் இசைக் கச்சேரிகளில் சூப்பர் சங்கரில் கலக்கிய பிரபலங்கள் தான் அதிகம் உள்ளனர்.
பிரியா ஜெர்சன்
கடந்த 2002ம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியருக்கான 9வது சீசனில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தான் ப்ரியா ஜெர்சன். இந்த சீசனின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் இருந்தார்கள்.
இந்த 9வது சீசனின் முதல் ரன்னர் அப் பட்டத்தை பிரியா ஜெர்சன் வென்று ரூ. 10 லட்சம் வென்றார்.
இந்த நிலையில் பிரியா ஜெர்சன் தனது காதலன் சார்லி ஜாய் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தனது திருமண வீடியோவை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ பிரியா ஜெர்சனின் திருமண வீடியோ,