நடிகர் சசிகுமார் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அவரது அண்ணன் தம்பி என பலரும் நல்ல நிலையில் தான் இருக்கின்றனர்.
மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி என்பது தான் சசிக்குமாரின் சொந்த ஊர். அங்கு விவசாய நிலத்தில் நடவு தொடங்கிய ஸ்டில்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் சசிக்குமார். அதனால் அவர் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக பாராட்டுகள் குவிந்தது.
புது பங்களா
மேலும் தற்போது அதே கிராமத்தில் சசிக்குமார் சொந்தமாக ஒரு பெரிய பங்களா வீட்டை கட்டி முடித்து இருக்கிறாராம்.
பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வீட்டின் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.