Saturday, March 15, 2025
Homeசினிமாசந்திரமுகி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்

சந்திரமுகி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்


நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ “Nayanthara: Beyond the Fairytale” என்ற பெயரில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியானது. அதில் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டு தனுஷை திட்டி இருந்தார்.

அந்த சர்ச்சை தற்போது நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா சந்திரமுகி பட தயாரிப்பாலாரிடமும் அனுமதி வாங்கவில்லை, அதனால் 5 கோடி நஷ்டஈடு கேட்டு அவர்கள் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக நேற்று செய்தி வெளியானது.

வெளியான ஆதாரம்

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக நயன்தாரா தரப்பு தற்போது NOC வாங்கிய லெட்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் 2ம் தேதியே சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நயன்தாராவின் ஆவணப்படத்தில் பட காட்சிகளை அனுமதித்து இருக்கிறது. இதோ.. 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments