Tuesday, February 18, 2025
Homeசினிமாசன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியலின் கதைக்களம் இதுதானா?.. வெளிவந்த தகவல்

சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியலின் கதைக்களம் இதுதானா?.. வெளிவந்த தகவல்


எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வந்தது எதிர்நீச்சல்.

கோலங்கள் தொடரை தொடர்ந்து திருச்செல்வம் இயக்கிய இந்த தொடருக்கு குறிப்பாக பெண்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.

காரணம் ஆணாதிக்கம், பெண் அடிமை என இப்போது உள்ள பெண்கள் அனுபவிக்கும் முக்கிய விஷயங்களை பற்றி இந்த தொடர் பேசி இருந்தது.

ஆனால் திடீரென என்ன காரணம் என தெரியவில்லை இந்த வருடத்தில் அதாவது சில மாதங்களுக்கு முன்பு முடித்துவிட்டார்கள்.

2ம் பாகம்


இந்த சீரியலை மிஸ் செய்த ரசிகர்கள் அடுத்த பாகம் வருமா என கேட்டு வந்த நிலையில் 2ம் பாக குறித்த தகவலும் வந்தது. தற்போது இன்று முதல் டிசம்பர் 23, இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் 2 கதை குறித்து திருச்செல்வம் கூறுகையில், மக்கள் எதிர்ப்பார்த்தபடி அவர்களுடைய ஆதங்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக 2ம் பாகம் இருக்கும்.

வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டிற்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தனது கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை எதிர்நீச்சல் 2 நிச்சயம் சொல்லும் என கூறியுள்ளார். 

சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியலின் கதைக்களம் இதுதானா?.. வெளிவந்த தகவல் | Is This The Storyline Of Ethirneechal 2 Serial

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments