சுந்தரி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன டிவி என்றால் அது சன் டிவி தான்.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி போன்ற சீரியல்கள் கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் டாப்பில் வந்துள்ளது.
அண்மையில் வெற்றிகரமாக ஓடிய இனியா தொடர் முடிவுக்கும் வந்துள்ளது.
கேப்ரியல்லா
அப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் சுந்தரி சீரியல். இதில் நாயகியாக நடித்து மக்களின் மனதை வென்றுள்ளவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
இவர் அண்மையில் தான் ஏன் சுந்தரி சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், என் அம்மாச்சிக்கு சீரியல் என்றால் மிகவும் பிடிக்கும். அவங்க ஒரு நாள் என்னிடம், நீ சீரியல் எல்லாம் பண்ண மாட்டியா என கேட்டாங்க. நம்ம ஆசைக்காக ஒரு ஓட்டம் ஓடணும், அவங்க ஆசைக்குன்னு ஒன்று இருக்கிறது.
அப்படி இருக்கும் போது கரெக்டா சுந்தரி சீரியல் வாய்ப்பு வந்தது, சரி வரதை நாம் வேண்டாம் என்று சொல்லக் கூடாது என நினைத்தேன்.
கலை மக்களுக்கு தான், அதை தரை வழியில் கொடுத்தாலும் சரி, திரை வழியில் கொடுத்தாலும் சரி, அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்ற எண்ணத்தில் தான் சுந்தரி சீரியலில் கமிட்டானேன் என கூறியுள்ளார்.