ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் டிவி என்றால் சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி தான்.
காலை 10 மணி முதல் இந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாக இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகும்.
இடையில் 3 மணி நேரம் மட்டும் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும்.
முடியும் தொடர்
சமீபத்தில் திடீரென எதிர்நீச்சல் தொடரை முடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
இந்த நிலையில் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இனியா தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக செய்தி வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இச்செய்தி கேட்ட ரசிகர்கள் நன்றாக ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஏன் முடிக்கிறீர்கள் என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.