சன் டிவி
சன் என்றாலே சீரியல்கள் தான் மிகவும் பிரபலம். தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே நிறைய தொடர்களை ஒளிபரப்பி உள்ளார்கள்.
காலை 10 மணிக்கு சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் 3 மணிநேரம் மட்டும் படம் இரவு 10 வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும். சிங்கப்பெண்ணே, கயல் போன்ற தொடர்கள் தான் டிஆர்பியில் இப்போதெல்லாம் டாப்பில் வருகிறது.
முடியும் தொடர்
தற்போது சன் டிவியில் முடிவுக்கு வந்துள்ள தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி, இனியா, மலர், சுந்தரி போன்ற தொடர்கள் முடிவுக்கு வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மலர் தொடரின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் இந்த சீரியலை மிஸ் செய்வோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.