தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி தான்.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கொஞ்சம் டிஆர்பியில் டல் அடிக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்தும் புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.
புதிய தொடர்
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் அறிவிப்பு தான் வந்துள்ளது.
பராசக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் பவன், டெப்ஜனி, ரமேஷ் கண்ணா, அஜய் ரத்னம், ராஜா, குறிஞ்சி என பலர் நடிக்க உள்ளார்களாம்.
இந்த புதிய தொடரை Vision Time தயாரிக்க உள்ளார்களாம்.