மலர் சீரியல்
சீரியல் ஆரம்பிக்கும் போது ஒருவர் நடிப்பதும் முடிவதற்குள் பலர் மாறுவதும் வழக்கம் தான்.
சின்னத்திரையில் இந்த விஷயம் நிறைய நடந்து வருகிறது. அப்படி அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நாயகியாக நடித்துவந்த ஷபானா வெளியேற புதிய நாயகி நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய சீரியலான மலர் தொடரில் இருந்து தான் விலகுவதாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ப்ரீத்தி ஷர்மா.
அவருக்கு பதில் விஜய் டிவியில் மோதலும் காதலும் தொடரில் நடித்துவந்த அஸ்வதி நாயகியாக மலராக நடித்து வருகிறார்.
வெளியேறியது ஏன்
இதுநாள் வரை மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து பேசாமல் இருந்த ப்ரீத்தி ஷர்மா தற்போது முதன்முறையாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், மலர் சீரியலில் இருந்து வெளியேறியது நான் எடுத்த கஷ்டமான முடிவு தான்.
எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, அருமையான குழுவை மிஸ் செய்ய போகிறேன் என பதிவு செய்துள்ளார். ஆனால் ஏன் வெளியேறினேன் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.