ப்ரீத்தி ஷர்மா
கலர்ஸ் தமிழில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியஸ் மூலம் நடிக்க தொடங்கியவர் ப்ரீத்தி ஷர்மா.
அதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் முக்கிய நாயகி வெளியேற அவருக்கு பதில் நடித்து வந்தார்.
அப்படியே 2020ம் ஆண்டு சன் டிவியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட சித்தி 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இந்த தொடர் முடிவடைய மலர் தொடரில் நடித்து வந்தவர் சில காரணங்களால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் ப்ரீத்தி ஷர்மா சீரியல்கள் நடித்து வருகிறார்.
புதிய தொடர்
இந்த நிலையில் நடிகை ப்ரீத்தி ஷர்மா தமிழில் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
அதாவது அவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடிகை பார்வதி நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.