சன் டிவி
சீரியல்கள் எங்களின் கண்கள் என சன் தொலைக்காட்சியில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
படங்கள் கூட 2ம் இடம் தான், அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது சீரியல்களுக்கு தான். அதனாலேயோ என்னவோ சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி தான் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
கொஞ்சம் டிஆர்பியில் தொடர் தடுமாறுகிறதா, உடனே அதை முடித்துவிட்டு புதிய தொடரை களமிறக்கிவிடுகிறார்கள். அப்படி தொடங்கி ஒரு வருடமே ஆன பூவா தலையா தொடரை முடிக்க முடிவு செய்துவிட்டார்கள்.
நேரம் மாற்றம்
இந்த நிலையில் டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடரின் நேரம் மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
அதாவது பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி தொடர் Non Prime Timeமிற்கு மாற்றப்படும் அவ்வது முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடுகளம் என்ற புதிய தொடர் களமிறங்க இருப்பதால் சுந்தரி சீரியலில் மாற்றம் என்கின்றனர்.