Friday, September 13, 2024
Homeசினிமாசமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்த நபர்.. திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா, வீடியோ இதோ

சமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்த நபர்.. திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா, வீடியோ இதோ


நாக சைதன்யா நிச்சயதார்த்தம்

கடந்த ஆகஸ்ட் ஆம் தேதி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துளிப்பாளா இருவரும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜூனா வெளியிட்டார்.


இது நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் என்பது அனைவரும் அறிந்தது தான். 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் நாக சைதன்யாவிற்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை இருவரும் அறிவித்தனர்.

சமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்த நபர்.. திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா, வீடியோ இதோ | Samantha Got Love Proposal From Her Fan

இதன்பின் நடிகை சோபிதாவுடன் நாகசைதன்யா காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை. நிச்சயதார்த்தன் மூலம் அதனை உறுதிசெய்துள்ளனர்.

சமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்த நபர்



இந்த நிலையில், அன்றைய நாளில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவிற்கு தனது காதலை ப்ரோபோஸ் செய்து ப்ளீஸ் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த நடிகை சமந்தா, வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என அந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

சமந்தாவிடம் ப்ரோபோஸ் செய்த நபர்.. திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா, வீடியோ இதோ | Samantha Got Love Proposal From Her Fan



இது விளையாட்டாக அவர் செய்திருந்தாலும், இந்த வீடியோவிற்கு நடிகை சமந்தா ரியாக்ட் செய்ததன் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments