சமந்தா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடர் உருவாகியுள்ளது. இதனுடைய ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து பங்காரம் எனும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து First லுக் போஸ்டரை கூட சமந்தா வெளியிட்டு இருந்தார். மேலும் தளபதி விஜய்யின் கடைசி படம் தளபதி 69ல் சமந்தா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆனால், இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர்.
நாக சைதன்யாவை மறக்கவில்லையா
இந்த நிலையில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தா இன்னும் நாக சைதன்யாவை மறக்கவில்லை என கூறி வருகிறார்கள்.
காரணம் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யாவின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்ட நிலையிலும், 2018ஆம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ரேஸ் காருக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை சமந்தா இன்னும் நீக்காமல் வைத்து இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது எங்களுக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது, தயவு செய்து அந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகை சோபிதாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.