பாக்கியலட்சுமி :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் ரசிகர் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு தொடர் ஆகும்.
தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தில் ரசிகர்கள் பெரிதும் பேசப்படும் இந்த சீரியலின் புதிய எபிசொட் மற்றும் லேட்டஸ்ட் ப்ரோமோ பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை :
ராதிகாவின் குழந்தை கருவில் அழித்த குற்றத்திற்கு ஈஸ்வரியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் நிக்க வைத்தார் ராதிகாவின் அம்மா. அது பொய்யான குற்றம் என கூறிய பாக்கியா, ராதிகாவின் மகள் மையூ உதவியுடன் ஈஸ்வரியை காப்பாற்றியுள்ளார்.
ஆனால், ஈஸ்வரி தனது மகன் கோபி தனக்கு எதிராக சாட்சி சொல்லி நீதிமன்றத்தில் குற்றவாளியாக தன்னை நிக்க வைத்து விட்டதை நினைத்து கோபியை வெறுக்க தொடங்கி விட்டார் ஈஸ்வரி.
சமையல் போட்டி :
ஒரு சமையல் போட்டியில் கோபி மற்றும் பாக்கிய இருவருமே நேரடியாக மோதிக்கொள்கிறார்கள். இந்த போட்டியில் பாக்கியா, ஈஸ்வரி ஒரு அணியாகவும். கோபி மற்றும் அவர் தொழிலாளர் மற்றொரு அணியாகவும் போட்டி போடுகிறார்கள்.
இந்த போட்டியில் இருவருமே இறுதியில் வெற்றி பெறுவதற்காக உழைத்து வருகின்றனர். இந்த போட்டியில் கோபி ஜெயித்து கதைக்களம் மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க பாக்கியாவின் மகள் இனியா ஒரு புது பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறாள். தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து அவர் பப் போன்ற இடங்களுக்கு இரவு நேரத்தில் சென்று அங்கு நடக்கும் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறாள்.
அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.