Monday, March 24, 2025
Homeசினிமாசம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி.. பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்

சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி.. பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்


ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பிரபலம். மாஸான நடை, ஸ்டைல், பஞ்ச் வசனம் என நிறைய விஷயங்கள் மூலம் இப்போதும் மக்களை கவர்ந்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

அதிர்ச்சி தகவல் 

இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு சம்பளம் பெறாமல் நடித்தது குறித்து தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், “1983- ம் ஆண்டு ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தங்கமகன்’.

ரஜினிகாந்த் கலை வரலாற்றில் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைத்த படங்களில் இந்த படமும் ஒன்று. ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ரஜினி.. பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல் | Rajinikanth Refused To Get Salary

இதனால் தங்கமகன் திரைப்படத்தின் ஷூட்டிங் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது. அதன் பின், உடல் நலம் தேறி ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வெளிவந்து நல்ல வரவேற்பை படம் பெற்றது. அப்போது ரூ. 10 லட்சம் சம்பள பாக்கியை கொடுக்க படக்குழு சென்ற போது ரஜினி என்னால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று கூறி அந்த தொகையை வாங்க மறுத்து தயாரிப்பாளரிடமே கொடுக்க சொல்லி விட்டார்” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments