Tuesday, February 18, 2025
Homeசினிமாசம்பாதித்த பணம் எல்லாம் போச்சு, ஜீரோ ஆகிட்டோம்.. மைனா நந்தினிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சம்பாதித்த பணம் எல்லாம் போச்சு, ஜீரோ ஆகிட்டோம்.. மைனா நந்தினிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை


மைனா நந்தினி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நந்தினி.

அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அந்த பெயரே அவரது பெயருக்கு முன்னாள் வந்தது.

சீரியலை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க தொடங்கியவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார்.

பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்துகொண்டவர் அதற்பின் சின்னத்திரை பக்கம் வரவில்லை.


யூடியூப் வீடியோ


மைனா விங்ஸ் என்கிற யூடியூப் சேனலை வைத்துள்ளார் மைனா நந்தினி.

இதில் தற்போது இவருக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். லவ் ஆக்ஷ்ன் டிராமா என்ற மற்றொரு சேனலை தொடங்கி அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார், புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரில் நடித்து தனது யூடியூபில் வெளியிட்டு வந்தார்.

சம்பாதித்த பணம் எல்லாம் போச்சு, ஜீரோ ஆகிட்டோம்.. மைனா நந்தினிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | Myna Nandhini Financial Loss For Youtube Video

தற்போது அந்த வெப் தொடரை பாதியில் நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்று படப்பிடிப்பு நடத்தி ஒரு ஹார்டு டிஸ்கில் போட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த வெப் தொடருக்காக மொத்தமாக 800 ஜிபி அளவு புட்டேஜை இலங்கையில் படமாக்கி இருக்கிறார்கள். அதை இந்தியா கொண்டுவந்தபோது அந்த ஹார்டு டிஸ்க் தவறுதலாக கீழே விழுந்திருக்கிறது.

சம்பாதித்த பணம் எல்லாம் போச்சு, ஜீரோ ஆகிட்டோம்.. மைனா நந்தினிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | Myna Nandhini Financial Loss For Youtube Video

அதன்பின்னர் அதை சிஸ்டத்தில் போட்டு பார்த்தபோது அது வேலை செய்யவில்லையாம். இதனால் தங்கள் உழைப்பு மற்றும் பணம் வீணாகிவிட்டதாக மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளனர். 

சம்பாதித்த பணம் எல்லாம் போச்சு, ஜீரோ ஆகிட்டோம்.. மைனா நந்தினிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | Myna Nandhini Financial Loss For Youtube Video



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments