Monday, February 17, 2025
Homeசினிமாசர்ச்சைக்கு பின் அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம்.. படப்பிடிப்பு புகைப்படம் இதோ

சர்ச்சைக்கு பின் அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம்.. படப்பிடிப்பு புகைப்படம் இதோ


அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி.

இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு, Bulgaria-வில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்து வருகிறார்.

மேலும் சுனில், நட்டி, அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் மற்றொரு முன்னணி நட்சத்திரமும் இணைந்துள்ளார்.

அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம்

அவர் வேறு யாருமில்லை நகைச்சுவையில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு தான். கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித் – யோகி பாபு குறித்து சர்ச்சை ஒன்று இணையத்தில் வைரலானது.

சர்ச்சைக்கு பின் அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம்.. படப்பிடிப்பு புகைப்படம் இதோ | Yogi Babu With Ajith In Good Bad Ugly Shooting Set

படப்பிடிப்பின் போது அஜித் தன்னைத் தொடாதீர்கள் என்று யோகி பாபு சொன்னதாக தகவல் ஒன்று வைரலானது.

இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் அஜித்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் யோகி பாபு. இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments