Wednesday, October 9, 2024
Homeசினிமாசல்மான் கையில் இருக்கும் வாட்ச் 42 கோடி ரூபாயா? அப்படி என்ன இருக்கு பாருங்க

சல்மான் கையில் இருக்கும் வாட்ச் 42 கோடி ரூபாயா? அப்படி என்ன இருக்கு பாருங்க


நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக ராஷ்மிகா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கின்றனர்.

சல்மான் கான் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. சமீபத்தில் அம்பானி வீட்டு திருமணத்தில் சல்மான் கான் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி இருந்தது.

42 கோடி ரூபாய் வாட்ச்

இந்நிலையில் சல்மான் கான் கையில் 42 கோடி ரூபாய் வாட்ச் உடன் இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. Jacob Arabo என்ற அமெரிக்க பணக்காரரின் வாட்ச் தான் அது. அதை அவர் சல்மான் கானுக்கு அணிவித்து எப்படி இருக்கிறது என பார்க்க வைத்து இருக்கிறார்.

Jacob and Co நிறுவனத்தின் Billionaire III வாட்ச் தான் அது. “என்னுடைய வாட்ச்சை யாருக்கு தரமாட்டேன். ஆனால் சல்மான் கானுக்கு மட்டும் விதிவிலக்கு” என Jacob Arabo பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வாட்ச்சில் 714 வைரக்கற்கள் இருக்கின்றன. வாட்ச் கேஸ்-ல் 152 வைரம் மற்றும் பிரேஸ்லெட்டில் 504 வைரங்கள், 57 வைரங்கள் movement bridgeகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சல்மான் கானின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments