அஜித்
நடிகர் அஜித், சினிமாவில் நடிப்பதை தாண்டி தனது கனவுகளின் பின்னால் ஓடக் கூடியவர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அண்மையில் பிரசன்னா இணைந்துள்ளதாக கூறியிருந்த நிலையில் நடிகர் பிரபுவும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது.
பைக் டூர்
சமைப்பது, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்த அஜித் இப்போது பைக்கில் உலகம் சுற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அண்மையில் அஜித் பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் பயணம் செல்வதால் என்ன மாற்றம் நடக்கிறது என அசால்டாக ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், இந்த உலகம் பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது, மக்களால் நிறைந்தது, பயணம் செய்தால் தான் அவற்றை பார்க்க முடியும், அதன்மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
பயணம் செய்வது ஒரு கற்றல் முறை, பயணப்படுவது ஒரு மருத்துவம்.
சாதியும் மதமும் இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும், இதன்மூலம் நீங்கள் இன்னொரு மனிதன் குறித்து முன்முடிவுக்கு வரக்கூடும் என பேசியுள்ளார்.