இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி இருந்தார் ஷங்கர். படத்தில் வரும் ஒவ்வொரு செட்டையும் கோடிக்கணக்கில் செலவழித்து போட்டு இருந்தனர்.
இருப்பினும் படத்தை பற்றி அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது. கமல் வர்மம் போட்ட காட்சிகள், சித்தார்த்தின் காட்சிகள் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
குறிப்பாக ‘சித்ரா அரவிந்தன் from சோசியல் மீடியா’ என அவர் ஒரு இடத்தில் போலீசிடம் கூறிய காட்சியை அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
முதலில் நடிக்க இருந்தது அவரா?
இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்த ரோலில் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தாராம். இயக்குனர் ஷங்கர் அவரை சந்தித்து அது பற்றியும் பேசி இருக்கிறார்.
இருப்பினும் சில காரணங்களால் சிவகார்திகேயனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.