Sunday, December 8, 2024
Homeசினிமாசினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்


திரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் ஜோடியாக நடிக்கிறாராம்.

சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் GOAT படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் நடமாடியிருந்தார்.

இந்த பாடல் வேற லெவலில் ஹிட்டானது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை நடிகை திரிஷா சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

நடிகை திரிஷா தனது ஆரம்பகால கட்டத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலின் செய்து வந்தார் என்பதை அறிவோம்.

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார் | Trisha Says She Will Not Come To Cinema For Acting

அப்போது அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் “நான் சினிமாவில் நடிக்க வர மாட்டேன், மாடலின் மட்டும் தான்” என கூறியுள்ளார்.

ஆனால், அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். இன்று உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments