Wednesday, October 9, 2024
Homeசினிமாசின்னத்திரைக்கு வந்த விஜய் ஆண்டனி, எந்த டிவி ஷோ- முழு விவரம் இதோ

சின்னத்திரைக்கு வந்த விஜய் ஆண்டனி, எந்த டிவி ஷோ- முழு விவரம் இதோ


விஜய் ஆண்டனி

வெள்ளித்திரையை விட இப்போதெல்லாம் சின்னத்திரை தான் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இதனாலேயே பிரபலங்கள் பலர் சின்னத்திரையில் களமிறங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பெற்று கலக்க தொடங்குகின்றனர்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விஷால், ஸ்ருதிஹாசன், கரு.பழனியப்பன், ஆரி போன்றோர் சமீபகாலமாக சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக கலக்கிய பிரபலங்கள்.

இவர்களது லிஸ்டில் ஒரு பிரபல நடிகர் களமிறங்குகிறார், ஆனால் அவர் நடுவராக வர இருக்கிறார்.


புதிய ஷோ

சன் டிவி, விஜய் டிவிக்கு நடுவே விதவிதமான சீரியல்கள், ஷோக்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அதிக ரேட்டிங்கை பெற்று உயர்ந்து வருகிறது ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் மகா நடிகை என்ற ரியாலிட்டி ஷோ வரப்போகிறதாம், இதில் விஜய் ஆண்டனி  நடுவர்களில் ஒருவராக களமிறங்குகிறார், அதேபோல் சரிதா மற்றும் அபிராமியும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கிறார்களாம்.


அதற்கான புரொமோ வெளியாக அதில் விஜய் ஆண்டனி பேசிய விஷயங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments