Wednesday, September 11, 2024
Homeசினிமாசின்னத்தை நீக்க வேண்டும்.. விஜய்யின் கட்சி கொடிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!

சின்னத்தை நீக்க வேண்டும்.. விஜய்யின் கட்சி கொடிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!


த.வெ.க 

நடிகர் விஜய், தனது கட்சியின் கொடியும், கட்சி பாடலையும் இன்று அறிமுகம் செய்துள்ளார். இது தான் இன்று தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று இருப்பது.



த.வெ.க கொடியில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடியில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் இடம்பெற்றிருக்கிறது. அந்த இந்த நிறங்களும் சின்னங்களும் குறிப்பிடுவது என்ன என்பதை ரசிகர்கள் DE CODING செய்து வருகின்றனர்.

புதிய சிக்கல்!! 



இந்நிலையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.   

சின்னத்தை நீக்க வேண்டும்.. விஜய்யின் கட்சி கொடிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! | Bahujan Samaj Party Demanded Tvk Party

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments